விடுதியில் நுழைந்து 6 நபர்கள் மீது ஆசிட் வீசிய பெண்! காரணம் என்ன?

Report Print Kabilan in பிரான்ஸ்
164Shares

பிரான்சின் மார்செய் நகரில் பெண்ணொருவர் விடுதி ஒன்றில் நுழைந்து ஆசிட் தாக்குதல் நடத்தியதில், காயமடைந்த 6 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் மார்செயின் பழைய துறைமுகத்திற்கு அருகே உள்ள விடுதியில் பெண் ஒருவர் நுழைந்துள்ளார். அவர் தான் கையில் வைத்திருந்த ஆசிட்டை அங்கிருந்தவர்கள் மீது திடீரென வீசியுள்ளார்.

இதனால் அங்கிருந்த ஆறு நபர்களின் முகம், கை, கால், தொடை ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தாக்குதல் நடத்திய பெண்ணை பொலிசார் உடனடியாக கைது செய்தனர். அப்பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், பயங்கரவாத தாக்குதலுக்கு உரிய எந்த தடயங்களும் கிடைக்கவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்