பிரான்சில் தொடரும் போராட்டம்.. 358 இடங்கள் முடக்கம்! ஒருவர் கைது

Report Print Kabilan in பிரான்ஸ்
104Shares

பிரான்சில் எரிபொருள் விலையை கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதால், பல இடங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை பிரான்சில் கணிசமாக உயர்ந்துள்ளதைக் கண்டித்து அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டயர்களை எரித்தும், கற்கள், மரங்களை சாலைகளில் போட்டும் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மொத்தமாக 358 இடங்களை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்களில் தெரிய வந்துள்ளது.

இவற்றில் பெரும்பாலும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் ஆகும். Hexagon, Fos-sur-Mer மற்றும் La Rochelle ஆகிய நகரங்களில் உள்ள எரிபொருள் கிடங்குகள் முற்றுகையிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், Gilet jaune-யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மனித சங்கிலி ஒன்றை உருவாக்கி வீதியை முடக்கியுள்ளனர். இதனால் A35 சாலையில் மிக நீண்ட போக்குவரத்து தடை ஏற்பட்டது.

இதன் காரணமாக சக உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடும் நோக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, 32 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு நான்கு மாத சிறைதண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த போராட்டத்தில் ஒரு பலியாகியுள்ளார். 511 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 17 பேரின் நிலைமை மோசமாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்