பிரான்சில் ஆசிரியரை நோக்கி துப்பாக்கியை நீட்டிய மாணவர்கள்: விசாரணையில் வெளியான உண்மை

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் ஆசிரியரை நோக்கி இரண்டு மாணவர்கள் துப்பாக்கியை நீட்டியதால், அதிர்ச்சியில் உறைந்து போன ஆசிரியர் இரண்டு நாட்கள் பள்ளிக்கு வராமல் விடுமுறை எடுத்துள்ளார்.

பிரான்சின் Loire மாநகரில் இருக்கும் Andrezieux-Boutheon பகுதியில் இருக்கும் உயர்நிலைப்பள்ளியில், 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு மாணவர்கள் பள்ளியில் இருந்த ஆசிரியர் ஒருவரின் அருகில் சென்று, அவரிடம் அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காண்பித்து மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஆசிரியர் இரண்டு நாட்கள் பள்ளிக்கு வராமல் வீட்டிலே தங்கியுள்ளார். அதன் பின் கடந்த வியாழக்கிழமை காவல்நிலையத்திற்கு சென்று இது குறித்து புகார் அளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை குறித்த இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வைத்திருந்த ஆயுதத்தை கவல்துறையினரால் கைப்பற்ற முடியவில்லை. இருப்பினும் அது ஒரு போலி ஆயுதம் என்பதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்