பிரான்ஸ் மக்களுக்கு எரிபொருள் உயர்வை தொடர்ந்து அடுத்து காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்: என்ன தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் ஏற்கனவே எரிபொருள் வரி ஏற்றம் காரணமாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மின்கட்டணமும் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அதிகப்படியான வரி விதிப்பை கண்டித்து அதிகளவிலான போராட்டம் நடைபெற்று வருகிறது.

எரிபொருள் வரி ஏற்றம், வாழ்வாதரப் பிரச்சினை, கொள்வனவிற்கான பணமின்மை, போன்ற காரணங்களால் மக்கள், இமானுவல் மேக்ரோன் பதவி விலகக் கோறும் கோரிக்கையும் வலுத்து வருகின்றது.

இது போன்ற சூழ்நிலையில் மின்சாரக் கட்டணம், வரும் பிப்ரவரி மாதம் முதல் அதிகரிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சக்திக் கட்டுப்பாட்டு ஆணையமான CRE (Commission de régulation de l’énergie) 2019 பிப்ரவரியில் 3% முதல் 4% வரையான கட்டண உயர்விற்கான வரைபை வழங்கி உள்ளது.

மீண்டும் 2020-ல் 2.3% முதல் 3.3% வரையான கட்டண உயர்விற்குமான கட்டளையும் கோரப்பட்டுள்ளது.

எரிபொருள் உயர்வையே எப்படி சரி செய்வது என்று மக்கள் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில், மின்சாரம் கட்டணம் உயர்வு அறிவிப்பு அவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுக்கலாம்.

இது மீண்டும் ஒரு போராட்டத்திற்கு வழிவகுப்பதோடு, மேக்ரோன் மீதான நம்பிக்கையையும் மேலும் வீழ்ச்சியடையச் செய்யும் என்று கூறலாம்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers