பிரான்சில் ஐந்து பெண்கள் மீது பாலியல் வல்லுறுவு மேற்கொண்ட 15 வயது சிறுவன்! அடுத்தடுத்த நாட்களில் பயங்கரம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் இளம் வயது பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 15 வயது சிறுவனை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பிரான்சின் Sarcelles (Val-d'Oise) பகுதியில் கடந்த திங்கட் கிழமை 15 வயது சிறுவன் அதே வயதுடைய பெண் ஒருவரை கத்தி ஒன்றின் மூலம் மிரட்டி, அருகில் இருக்கும் குளம் ஒன்றின் கரையில் வைத்து ஆடைகளை அவிழ்க்கச் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதே போன்று தொடர்ந்தும் 13 மற்றும் 15 வயதுடைய சிறுமிகளை அடுத்தடுத்த நாட்களில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளான்.

இதையடுத்து அந்த சிறுவனை BAC அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மொத்தமாக ஐந்து பெண்களை இதுபோல் பாலியல் வல்லுறவு மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள இவனிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்