பிரான்ஸ் விமானநிலையத்திற்குள் திடீரென்று நுழைந்த போராளிகள்: நடந்த பரபரப்பு சம்பவம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் போராட்டம் நடத்தி வரும் போராளிகள், விமான நிலையத்திற்குள் அத்து மீறி நுழைந்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பிரான்சில் நாடு முழுவதும் எரிபொருள் உயர்வைக் கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில் Nantes நகரில் உள்ள Atlantique விமான நிலையத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்தனர்.

நேற்று முன் தினம் காலை முதல் 150 வரையான மஞ்சள் மேலாடை போராளிகள் விமான நிலையத்தை ஒட்டியுள்ள வீதிகளை முற்றுகையிட்டிருந்தனர்.

நண்பகலுக்கு சற்று முன்னதாக விமான நிலையத்தின் நான்காம் இலக்க மண்டபத்துக்குள் நுழைந்தனர். பின்னர் காவல்துறையினர் அவர்களை மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் வெளியேற்றினர்.

இதனைத் தொடர்ந்து உள்ளூர் நேரப்படி சரியாக பகல் 12.00 மணிக்கு மீண்டும் ஒரு குழு விமானநிலையத்துக்குள் நுழைந்தது.

அவர்கள் விமானங்களுக்கு அருகே வரை சென்றுள்ளனர்.

Loire-Atlantique நகர அதிகாரி இது குறித்து கூறுகையில், இரண்டாவது சம்பவம் பத்து நிமிடங்கள் மாத்திரமே நீடித்தது. அதற்குள்ளாகவே அவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்