இது மிக மோசமான வன்முறை: பாரிஸ் நகர மேயர் கடும் விமர்சனம்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் பாரிஸ் நகரில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறையை, அந்நகர மேயர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து, பிரான்சின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தலைநகர் பாரிசில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதில் போராட்டக்காரர்கள் அங்கிருந்த கார்கள் மற்றும் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். பின்னர் பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்ட 412 பேரை கைது செய்தனர். இந்த வன்முறையில் 133 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் இச்சம்பவத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அத்துடன் இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகையில் கூட்டிய அவசரக் கூட்டத்தில் இம்மானுவல் மேக்ரான், பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், பாரிஸ் நகர மேயர் Anne Hidalgo இந்த வன்முறை சம்பவம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில்,

‘இந்த வன்முறை கேள்விப்படாத ஒன்று. மே 1968 வன்முறைக்குப் பின்னர் இடம்பெறும் மிக மோசமான வன்முறை இது. நிலமை படு மோசமாகியுள்ளது. நாங்கள் இது தொடர்பாக பேசி புரியவைக்க வேண்டும்.

இந்த வன்முறைகளையும், மஞ்சள் மேலாடை போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவர அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். 1000 யூரோக்களுக்கும் குறைவான வருமானத்தை கொண்டுள்ளவர்களுக்கு, இந்த எரிபொருள் விலையேற்றம் சிரமமாக படலாம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers