பிரான்சில் டிசம்பர் மாதம் கொண்டுவர இருக்கும் மாற்றங்கள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

இந்த செய்தியில் சொந்த வீடுகள் வைத்திருப்போர், எரிவாயு பயன்படுத்துவோர், வரி செலுத்துவோர் மற்றும் அடிக்கடி பாலுறவு கொள்வோர் ஆகியோருக்கான சில தகவல்கள் உள்ளன.

சொந்த வீடுகள் வைத்திருப்போர்

50 கட்டிடங்களுக்கு குறைவான சொந்த வீடுகளை உடைய ஒரு பிளாக்கில் உங்களுக்கு ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பு இருக்குமென்றால், நீங்கள் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் அதை பதிவு செய்ய வேண்டும்.

பொது விடுமுறை

டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸை முன்னிட்டு பிரான்சில் பொது விடுமுறை அளிக்கப்படுவதோடு, Boxing Dayக்கு விடுமுறை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துதல் தொடர்பான மாற்றங்கள்

வரி செலுத்துதல் தொடர்பான தகவல்களில் மாற்றங்கள் தேவைப்பட்டால் டிசம்பர் மாதம் 18ஆம் திகதிக்குள் அவற்றை செய்து முடித்து விட வேண்டும்.

அதற்குப்பின் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

இலவச ஆணுறைகள்

HIV மற்றும் இதர பால்வினை நோய்கள் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, மருத்துவரால் பரிந்துரை செய்யப்பட்டு வாங்கப்படும் Eden condoms வகை ஆணுறைகள் டிசம்பர் மாதம் 10ஆம் திகதியிலிருந்து இலவசமாக்கப்பட உள்ளன.

எரிவாயு விலைகளில் மாற்றங்கள்

டிசம்பர் 1 முதல் எரிவாயு விலைகளில் 2.4 சதவிகிதம் வரை குறைக்கப்படுகிறது.

சமையலுக்கு எரிவாயுவை பயன்படுத்துவோருக்கு 0.8 சதவிகிதமும், சமையலுக்கும், தண்ணீர் கொதிக்க வைப்பதற்கும் எரிவாயு பயன்படுத்துபவர்களுக்கு 1.5 சதவிகிதமும், சமையல், தண்ணீர் கொதிக்க வைக்க மற்றும் வீட்டை சூடாக்க எரிவாயு பயன்படுத்துவோருக்கு 2.4 சதவிகிதமும் விலை குறைப்பு செய்யப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers