போராட்டக்களமாக மாறி வரும் பிரான்ஸ்: ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் எடுத்துள்ள முடிவு

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் மஞ்சள் ஆடை போராளிகள், ஏற்பாட்டாளர்கள், அமைப்பினர் அனைவரையும் சந்திப்பதற்கு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து, பிரான்சின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தலைநகர் பாரிசில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதில் போராட்டக்காரர்கள் அங்கிருந்த கார்கள் மற்றும் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். பின்னர் பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்ட 412 பேரை கைது செய்தனர். இந்த வன்முறையில் 133 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதி இமானுவல் மேக்ரோன், மஞ்சள் ஆடை போராளிகள், ஏற்பாட்டாளர்கள், அமைப்பின அனைவரையும் சந்திப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை பிரதமர் எத்துவா பிலிப்பிடம் ஜனாதிபதி இந்த தகவல்களை வழங்கியுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களின் தலைவர்கள், பிரதிநிதிகள், தகவல் தொடர்பாடல் செய்பவர்கள் என அனைவரையும் எலிசே மாளிகைக்கு அழைக்கும் படி எத்துவா பிலிப்பை கோரியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, டிசம்பர் 8 சனிக்கிழமையும் பரிசை முடக்க திட்டமிட்டுள்ள வேளையில், மேக்ரான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பேச்சுவார்த்தை எப்போது, எந்த திகதி என்பது குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers