போராட்டக்காரர்கள் கூட்டத்தில் தீவிரவாதிகள் புகுந்துவிட வாய்ப்புள்ளது: எச்சரிக்கும் இமானுவல் மேக்ரான்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரீஸில் நடைபெற்றுவரும் மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள் கூட்டத்தில் தீவிரவாதிகள் புகுந்துவிட வாய்ப்புள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் எச்சரித்துள்ளார்.

எரிபொருள் வரி உயர்வு முதலான பிரச்சினைகள் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பொலிசார் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

Champs Elysees பகுதியில் சுமார் 1,500 போராட்டக்காரர்கள் இருப்பதாகவும், அவர்களில் 127பேர் சுத்தியல்கள், பேஸ்பால் மட்டைகள் போன்றவற்றை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை நடந்ததைப்போல இன்றும் ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக சுமார் 8000 பொலிசார் பாரீஸில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சுற்றுலாத்தலங்கள் மற்றும் ஷாப்பிங் செல்லும் இடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான பொலிசார் பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்களுக்குள் தீவிரவாத எண்ணங்கள் கொண்ட மற்றும் முரட்டாட்ட குணங்கள் கொண்ட கூட்டங்கள் புகுந்து விட வாய்ப்புள்ளது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் எச்சரித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers