கடும் குளிரினால் பிரான்சின் முக்கிய நகரில் தடைபட்ட ரயில்கள்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் இல்-து-பிரான்ஸ் நகரில் நிலவும் கடுமையான குளிரினால், நேற்றைய தினம் பல ரயில் சேவைகள் தடைபட்டன.

மஞ்சளாடைப் போராளிகள் எரிபொருள் மீதான வரி உயர்வை எதிர்த்து பிரான்சில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மறுபுறம் கடுமையான குளிர்காலம் அங்கு நிலவி வருகிறது.

இந்நிலையில் பிரான்சின் பல இடங்களில் கடும் குளிர் காரணமாக ரயில் சேவை நேற்று தடைப்பட்டது. அதாவது, ரயில்களுக்கான மின்சாரம் வழங்கும் கோபுரங்களும், கம்பிகளும் கடுங்குளிர் காரணமாக உறைந்திருந்தால் இந்த தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தெற்கு பகுதியில் ஏற்பட்ட கடுமையான பனி வீழ்ச்சியினால் Gare d'Austerlitz மற்றும் Gare du Montparnasse ஆகியவற்றில் மின் கோளாறு ஏற்பட்டு, இல்-து-பிரான்சில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் TGV, TER மற்றும் தொலைதூர ரயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டு, பின்னர் மிகவும் தாமதமாக புறப்பட்டு சென்றன. இந்நிலையில், ரயில்களின் சேவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers