வால்-டி-மார்ன் நகரில் திடீர் தீ விபத்து! ஒருவர் பலி

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் வால்-டி-மார்ன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீப்பிடித்து எரிந்ததில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று காலை 6 மணியளவில், வால்-டி-மார்ன் நகரின் Saint-Maur-des-Fosses பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 2வது தளத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த 43 தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் பல தீயணைப்பு வாகனங்கள் குவிக்கப்பட்டன.

கடுமையான போராட்டத்திற்கு பின்னர் ஒரு வழியாக தீ அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் காரணமாக காலை 9 மணி வரை அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்