போராட்டத்தின் போது பாரிசில் வெடித்த வன்முறை! 57 பேர் கைது

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் பாரிஸ் நகரில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் 57 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

நேற்றைய தினம் பாரிசில் 800 பேர் வரையிலான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போராடினர். அமைதியாக சென்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குறிப்பாக பிரெஞ்சு தொலைக்காட்சி நிலையங்களுக்கு முன்பு பலர் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த வன்முறையில் கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கண்ணீர் புகைகுண்டு வீச்சின் போது பொலிசாரின் மீது கற்கள் முதலிய பொருட்களை வீசினர்.

ஈபிள் டவர் அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட மஞ்சள் ஆடை போராட்டக்காரர்கள் பலரை பொலிசார் கைது செய்தனர். சோம்ப்ஸ்-எலிசேக்குள் ஒரு மஞ்சள் மேலங்கி போராளியைக் கூட அனுமதிக்காததால், அங்கு எவ்வித இடையூறுகளும் இன்றியிருந்ததாக கூறப்படுகிறது.

Reuters

ஆனால், பாரிசில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 57 பேரை பொலிசார் கைது செய்தனர். அவர்களில் 33 பேர் பொலிசின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் மேக்ரோன் ஆதரவாளர்கள் புதிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

AFP/Getty Images

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers