பிரான்சில் போராட்டக்காரர்களின் அறிவிப்பு எதிரொலி: ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொலிஸார் குவிப்பு

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

பிரான்சில் பிரதமர் புத்தாண்டு உரை நிகழ்த்தும் போது போராட்டம் நடத்த உள்ளதாக போராட்டக்காரர்கள் அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, 1 லட்சத்து 50 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாகவே, அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினரும் திணறி வருகின்றனர். போராட்டக்கார்கள் மீது நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையால் கடந்த 15 நாட்களாக போராட்டத்தின் வீரியம் குறைந்திருந்தது.

இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு பிரான்ஸ் அதிபர் எமானுவல் மேக்ரோன் 8:00 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்க உள்ளார்.

அந்த சமயம் பாரிஸ் நகரின் சாம்பஸ்-எலிஸஸ் அவென்யூ பகுதியில் பெரும் போராட்டம் நடத்த போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனை தடுக்கும் விதமாகவும், அமைதியை நிலைநாட்டவும் 150,000 பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers