ராட்டினத்தில் ஒன்பது மணிநேரமாக கடுங்குளிரில் சிக்கி தவித்த எட்டுப்பேர்: புதுவருட நாளில் நிகழ்ந்த சம்பவம்

Report Print Kavitha in பிரான்ஸ்

புதுவருட தினத்தில், Rennes நகரில் இடம்பெற்ற கேளிக்கை விளையாட்டின் போது 8 பேர் கொண்ட குழு ராட்டினத்தில் சிக்கி உயிருக்கு போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுவருட தினத்தை முன்னிட்டு Rennes நகரில் கேளிக்கை விளையாட்டுக்கள் இடம்பெற்றுள்ளது.

இதில் எட்டுப்பேர் கொண்ட குழு ஒன்று ராட்டினத்தில் ஏறி 50 மீட்டர் உயரத்தில் சென்றிருந்த போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு அங்கேயே ராட்டினம் செயலிழந்துள்ளது.

இந்நிலையில் உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு மீட்புப்பணி ஆரம்பிக்கப்பட்டது.

இது குறித்து மீட்புப்பணியினர் இது மிக சவாலாம விடயமாக அமைந்தது மற்றும் ராட்டினம் கட்டுப்பாடு இன்றி செல்ல வாய்ப்புகள் இருந்ததால் மிக நிதானமாக செயற்படவேண்டிய தேவை ஏற்பட்டது என்று கூறியுள்ளனர்.

இறுதியாக இவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5:40 மணிக்கு ராட்டினத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஒன்பது மணிநேரமாக அவர்கள் ராட்டினத்தின் அந்த எட்டுபேரும் உச்சியில் கடும் குளிரில் சிக்கியிருந்ததாக அதிர்ச்சியுடன் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers