பிரான்சில் புத்தாண்டு தினத்தன்று பரிதாபமாக தீயில் கருகி இறந்த நபர்! போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் புத்தாண்டு தினத்தன்று இரவு குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஒருவர் பரிதாபமாக தீயில் கருகி இறந்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் 11-ஆம் வட்டாரத்தில் இருக்கும் rue Richard-Lenoir வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு படையினருக்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து தீயை அணைப்பதற்காக சுமார் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர்.

நீண்ட போராட்டத்திற்கு பின் தீயை அணைத்த நிலையில், கட்டிடத்தின் உள்ளே ஒருவர் இறந்துள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் அந்த நபரின் சடலம் மீட்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கட்டிடத்தில் இருந்து நபர் ஒருவரின் சடலத்தை அதிகாலை 4 மணி அளவில் தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.

குறித்த நபர் அக்கட்டிடத்தில் வாடகைக்கு வசித்திருந்ததாகவும், தீ விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers