பொலிசாரை கட்டியணைத்து புத்தாண்டு வாழ்த்து கூறிய மஞ்சள் மேலாடை போராளி! வெளியான புகைப்படம்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் சோம்ப்ஸ்-எலிசேயில் மஞ்சள் மேலாடை போராளி ஒருவர் பொலிசாரை கட்டியணைத்து புத்தாண்டு வாழ்த்து கூறிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

சோம்ப்ஸ்-எலிசே நகரில் கடந்த நவம்பர் 17ஆம் திகதியில் இருந்து பொலிசாருக்கும், மஞ்சள் மேலாடை தரப்புக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், புத்தாண்டை வரவேற்க மக்களில் சுமார் 2,50,000 பேர் கூடியிருந்தனர். இவர்களுடன் குறைந்த அளவில் மஞ்சள் மேலாடை போராளிகளும் கலந்துகொண்டனர்.

கடந்த ஒன்றரை மாதங்களாக சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெற்ற போராட்டங்களுக்கு மாறான நிகழ்வு ஒன்று புத்தாண்டு தினத்தன்று நடந்தது.

அதாவது CRS பொலிஸ் அதிகாரி ஒருவரை மஞ்சள் மேலாடை போராளி ஒருவர் கட்டியணைத்து புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார்.

இந்நிகழ்வினை சுற்றியிருந்த ஊடகவியலாளர்கள் பலர் படம் பிடித்தனர். இச்சம்பவம் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers