உலகின் மிக வயது முதிர்ந்த நபர் ஒரு ஏமாற்றுக்காரர்? ஒரு அதிர்ச்சி செய்தி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

மனித வரலாற்றிலேயே அதிக காலம் வாழ்ந்தவர் என கருதப்படும் பெண்மணி, வரி ஏய்ப்பு செய்வதற்காக தனது தாயின் அடையாளத்தை பயன்படுத்தி உலகத்தை ஏமாற்றி வந்ததாக கண்டறியப்பட்டுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Jeanne Calment தனது 122ஆவது வயதைத் தாண்டி 164 நாட்கள் வாழ்ந்த நிலையில், 1997ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

அவரது வயதின் அருகில் கூட யாராலும் நெருங்க இயலாததால், மனித வரலாற்றிலேயே அதிக காலம் வாழ்ந்தவர் என அவர் கருதப்படுகிறார்.

ஆனால் ரஷ்யாவைச் சேர்ந்த கணிதவியலாளரான Nikolay Zak, Jeanneஇன் கதை உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை என்கிறார்.

Jeanne Calment என அழைக்கப்பட்டவர் உண்மையில் Jeanne அல்ல, அவர் Jeanneஇன் மகளான Yvonne என்கிறார் Nikolay.

வரி ஏய்ப்பு செய்வதற்காக அவர் 1934ஆம் ஆண்டு தனது தாயின் அடையாளத்தை திருடியிருக்க வேண்டும் என்றும், அதன்படி பார்த்தால் அவர் இறக்கும்போது அவரது வயது வெறும் 99ஆகத்தான் இருக்க முடியும் என்கிறார் அவர்.

இறப்பதற்குமுன் Jeanneஇடம் மேற்கொள்ளப்பட்ட பல சோதனைகளில் அவர் 80, 90 வயதுள்ளவர்களின் அளவில் மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

அதுமட்டுமின்றி, அவரது காது, நெற்றி மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படும் உயரக் குறைவு ஆகியவற்றின் அடிப்படையிலும் அவர் 80, 90 வயதுகளில்தான் இருக்க வேண்டும்.

ஒரு மருத்துவராக நான் எப்போதுமே Jeanneஇன் வயதை சந்தேகப்பட்டிருக்கிறேன், அவரது தசைகள், அவரது வயதையொத்தவர்களின் தசைகளிலிருந்து வித்தியாசமாக இருந்தன.

அதேபோல் அவருக்கு மறதி நோய் ஏற்படவும் இல்லை, யாருடைய உதவியும் இல்லாமலே அவர் உட்காருவதுமுண்டு என்கிறார் Nikolay.

ஆனால் Jean-Marie Robine என்னும் பிரான்ஸ் நாட்டு மருத்துவ ஆய்வாளர் உட்பட சிலர், Nikolayயின் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கிறார்கள்.

ஒருவரின் வயதை நிரூபிக்கும் எதையும் நாம் கண்டுபிடிக்கவில்லை என்று கூறும் Jean-Marie, Jeanneஇன் வயதை சிறிதளவேனும் சந்தேகப்படும் எதையும் நாங்கள் கண்டுபிடிக்கவும் இல்லை என்கிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers