2019க்கான முக்கிய முடிவு! அமைச்சர்களை சந்தித்த இமானுவல் மேக்ரான்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், 2019ஆம் ஆண்டு சீர்திருத்தங்களுக்கான செயல்பாட்டினை அமல்படுத்த அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எரிவாயு மீதான வரி உயர்வை கண்டித்து, பிரான்சில் நடைபெற்று வரும் மஞ்சள் மேலாடை போராட்டங்களினால் அந்நாட்டில் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது.

இதனால் பிரான்ஸ் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான சீர்திருத்தங்களை முன்னெடுக்க உள்ளதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.

அதன்படி கேபினேட் அமைச்சர்களுடனான சந்திப்பில் மேக்ரான் ஈடுபட்டார். இந்த சந்திப்பில் 2019ஆம் ஆண்டில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் வேலை வாய்ப்பு நலன்கள், ஓய்வூதிய அமைப்பு ஆகியவற்றை சீரமைப்பது ஆகிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாக தெரிகிறது.

முன்மொழியப்பட்ட மாற்றங்களை தேசிய அளவில் விவாதப் பொருளாக கொண்டு சேர்க்கும் முயற்சியில் பிரான்ஸ் இறங்கும் என்பதற்கான வாக்குறுதியை மேக்ரான் அளித்தார்.

மேலும், இதற்காக ஜனவரியில் தனது திட்டங்களை கோடிட்டு பிரெஞ்சு மக்களுக்கு கடிதமாக கொண்டு சேர்க்கவும் அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று மாத காலப்பகுதியில் பிரான்சில் இந்த தேசிய அளவிலான விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers