போராட்டத்தின்போது பொலிசாரை தாக்கிய குத்துச்சண்டை வீரர்: குவிந்த ஒரு லட்சம் யூரோக்கள் நன்கொடை!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் நடந்த மஞ்சள் ஆடை போராட்டத்தில் பொலிசாரை தாக்கிய குத்துச்சண்டை வீரருக்கு நன்கொடைகள் குவிந்த வண்ணம் உள்ளன.

கடந்த சனிக்கிழமையன்று பிரான்சின் Leopold-Senghor மேம்பால கடவையில் ஒரு பக்கம் மஞ்சள் ஆடை போராளிகள் முற்றுகையிட்டனர். அப்போது பொலிசார் அங்கிருந்து போராளிகளை வெளியேற்றிக் கொண்டிருந்தபோது, குத்துச்சண்டை வீரர் ஒருவர் பொலிசார் ஒருவரை தாக்கினார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து Christophe Dettinger அந்த குத்துச்சண்டை வீரர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். பின்னர் அவருக்கான நன்கொடையினை அவரது மைத்துனி சேகரித்து வருகின்றார்.

சமூக வலைதளம் ஊடாக குறிப்பிட்ட சிலமணி நேரங்களுக்குள் பெரிய தொகை கிடைத்துள்ளது. அதன்படி இதுவரை சுமார் 1,13,000 யூரோக்கள் நன்கொடையாக சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நன்கொடை தொகை மேலும் உயரலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers