எனக்கு 25 வயது பெண்ணின் உடல்தான் பிடிக்கும்: பிரபல எழுத்தாளரின் பேச்சால் சர்ச்சை

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

எனக்கு 50 வயது பெண் ஒருவரைக் காதலிக்க முடியாது, ஏனென்றால் அவர்கள் உடல் சாதரணமானது, ஒரு 25 வயது பெண்ணின் உடல்தான் அசாதாரணமானது என்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஒருவர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பல விருதுகள் பெற்ற நாவல்களை எழுதியவரான Yann Moix (50) ஒரு பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இவ்விதம் தெரிவித்துள்ளார்.

உங்களால் 50 வயது பெண் ஒருவரைக் காதலிக்க முடியும் இல்லையா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த Yann, 50 வயதில் என்னால் ஒரு 50 வயது பெண்ணைக் காதலிக்கமுடியாது.

60 வயதாக இருக்கும்போது வேண்டுமானால், ஒரு 50 வயது பெண்ணைக் காதலிக்கலாம் என்று அவர் கூற, நீங்கள் கூறுவது உங்களுக்கே அசிங்கமாக இல்லையா என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், நிச்சயம் அசிங்கமாக இல்லை, எனக்கு அதைப்பற்றிக் கவலையும் இல்லை, என்னைப் பொருத்தவரை 50 வயதானவர்களை நான் கணக்கில் எடுத்துக் கொள்வதேயில்லை, எனக்கு இளம் பெண்களின் உடல்தான் பிடிக்கும்.

நான் பொய் சொல்லவில்லை, ஒரு 25 வயது பெண்ணின் உடல் அசாதாரணமானது, 50 வயது பெண்ணின் உடல் அவ்வாறு இல்லை என்றார் அவர்.

இவ்வாறு அவர் கூறியதற்கு பலரிடமிருந்தும் பலத்த எதிர்ப்பு தோன்றியது. சமூக ஊடகங்களில் அவரை வறுத்தெடுத்தனர் பல தரப்பினரும்.

ஆனால் மீண்டும் வானொலி ஒன்றிற்கு பேட்டியளித்த Yann தனது கருத்துகள் தனக்கு வருத்தமளிக்கவில்லை என்றும், தனக்கு எது பிடிக்குமோ அதைத்தான் தான் விரும்புவேன் என்றும் மற்றவர்களின் விருப்பங்கள் குறித்த கருத்துகள் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers