இளம்பெண் பொலிசாரால் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிகளை சிக்க வைத்த உள்ளாடை

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

சுற்றுலாப்பயணி ஒருவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொலிசாரே கனேடிய இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கியதோடு, அவரது விருப்பத்தின் பேரிலேயே பாலுறவு கொண்டதாக பொய்யும் கூறிய நிலையில்,

அந்த பெண்ணின் உள்ளாடையில் அந்த பொலிசாரின் DNA கிடைத்துள்ளதோடு, அவளது பெண்ணுறுப்பில் ஏற்பட்டிருந்த காயங்களும் பிரான்ஸ் பொலிசார் இருவரை சிக்க வைத்துள்ள சம்பவம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

Emily Spanton என்னும் கனேடிய இளம்பெண், பாரீஸ் பொலிஸ் நிலையத்திற்கு அருகேயுள்ள மதுபான விடுதி ஒன்றில் சீருடையில் இல்லாத பொலிசார் சிலரை சந்தித்துள்ளார்.

அனைவரும் மதுபானம் அருந்தியபிறகு, தங்கள் பொலிஸ் தலைமையகத்தைக் காண்பதற்காக Emilyயை அந்த பொலிசார் அழைத்துள்ளனர்.

இந்த நேரத்தில் வீட்டுக்கு செல்வதைவிட பொலிஸ் நிலையத்திற்கு செல்வது பாதுகாப்பானது என்று எண்ணிய Emily அவர்களுடன் சென்றார்.

அங்கு அவர்கள் Emilyயை இன்னும் அதிக மதுபானம் குடிக்க வைத்து, ஒன்றரை மணி நேரம் கூட்டு பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கியிருக்கின்றனர்.

வெறுங்காலுடனும் உள்ளாடையின்றியும் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார் Emily.

பின்னர் Emily புகாரளித்ததன்பேரில் இரண்டு பொலிசார் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் அந்த பொலிசாரில் ஒருவர் Emilyயின் சம்மதத்தின் பேரிலேயே பாலுறவு கொண்டதாக தெரிவிக்க, இன்னொருவரோ வெறுமனே பாலுறுப்புகளை தொட்டுக் கொண்டதாகவும் பாலுறவு கொள்ளவே இல்லை என்றும் கூறிவிட்டார்.

முதலில் தள்ளுபடி செய்யப்பட்ட அந்த வழக்கு Emily மேல் முறையீடு செய்தபின், மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் Emilyயின் உடலில் அளவுக்கதிகமான மதுபானம் இருந்தது தெரிய வந்ததையடுத்து, அவர் சம்மதத்துடனேயே பாலுறவு கொண்டதாக ஒரு பொலிசார் கூறியிருந்தது பொய் என்று கண்டு பிடிக்கப்பட்டது.

அதே நேரத்தில் Emilyயின் உள்ளாடையில் மூன்று பேரின் DNA கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் மருத்துவப் பரிசோதனையில் Emilyஉடலில் பல்வேறு பாகங்களிலும், அவரது பெண்ணுறுப்பிலும் காயங்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து அவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டது.

Antoine Q.மற்றும் Nicolas R. என்னும் இரண்டு பிரெஞ்சு பொலிசார் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது நபரை இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

கிடப்பில் போடப்பட்ட விசாரணை மீண்டும் தொடர்ந்து நடந்து வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers