பிரான்சில் மஞ்சள் மேலாடை போராட்டம் போல் இன்னொரு புதிய போராட்டம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சின் அமைதியைக் குலைக்கும் வகையில் போராடும் மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்களுக்கு எதிராக இன்னொரு கூட்டத்தார் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.

ஆன்லைனில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு புதிய மக்கள் இயக்கம், சிவப்பு ஸ்கார்ஃப்கள் என தங்களை அழைத்துக் கொண்டு பாரீஸ் தெருக்களில் பேரணிகளில் இறங்கியுள்ளனர்.

பல மாதங்களாக நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில் வன்முறையில் இறங்கிய மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்களுக்கு எதிராக இந்த சிவப்பு ஸ்கார்ஃப் கூட்டத்தார் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சிவப்பு ஸ்கார்ஃப் அணிந்த ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள், அரசுக்கு எதிராக மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள் நடத்திய போராட்டங்களால் நாட்டின் அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால், வன்முறைக்கு ஒரு முடிவு கட்டும்படி அழைப்பு விடுத்து பாரீஸில் பேரணிகளில் இறங்கியுள்ளனர்.

மஞ்சள் மேலாடைக்காரர்களைப்போலவே இவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள சிவப்பு ஸ்கார்ஃப்களை பயன்படுத்துகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers