கைகள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டியின் சடலம்: விசாரணையில் வெளியான முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்ஸில் Essonne பகுதியில் மூதாட்டி ஒருவரின் சடலம் கைகள் கால்கள் பிணைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Essonne பகுதியில் உள்ள Paray Vieille-Poste நகராட்சியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் 80 வயது முதியவர் மீட்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த இந்த சம்பவத்தில் தகவல் அறிந்து சம்பவப் பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் மேற்கொண்ட விசாரணையில்,

இது கொள்ளை சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளது என முதல்கட்டமாக தெரிவித்துள்ளனர். குறித்த மூதாட்டி, கை கால்கள் கட்டப்பட்டப்பட்டு கட்டிலில் கிடந்துள்ளார்.

ஆனால் உயிரிழந்துள்ளது ஏன் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. உடனடியாக அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் அது பலனளிக்கவில்லை என கூறப்படுகிறது.

குடியிருப்புக்குள் நுழைந்த கொள்ளையர்கள் தொடர்பில் தகவல்களை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

மட்டுமின்றி குறித்த மூதாட்டியை பராமரித்து வரும் தாதியரையும் பொலிசார் விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers