பொலிஸ் வாகனத்திலிருந்து கைதியை மீட்டுச் சென்ற கும்பல்: பிரான்சில் பரபரப்பு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று தென் பிரான்சில் பொலிஸ் வாகனம் ஒன்றிலிருந்த சிறைக்கைதி ஒருவரை மீட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tarascon நகரில் நடந்த அந்த சம்பவத்தில், ஒரு கும்பல் பெண் பொலிசார் ஒருவரை தாக்கி தரையில் தள்ளிவிட்டு, கைதி இருந்த வாகனத்தை நோக்கி சுட்டது.

ஆயுதங்களுடன் கொள்ளைச் சம்பவம் ஒன்றை அரங்கேற்றியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த அந்த கைதி, Beziers சிறையிலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவதற்காக கொண்டு செல்லப்படும்போது இந்த சம்பவம் நடைபெற்றது.

பிரான்சில் சிறை ஒன்றிலிருந்து கைதியை ஆயுதம் ஏந்திய கும்பல் மீட்டுச் செல்வது இது இரண்டாவது முறையாகும்.

கடந்த ஜூலை மாதம் Rédoine Faïd என்னும் கொள்ளைக் கும்பல் தலைவனை இதேபோல் அவனது கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஹெலிகொப்டர் ஒன்றின் உதவியோடு மீட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Beziersஇல் நடந்த சம்பவத்தில், தாக்குதல் நடந்ததையடுத்து மற்ற காவலர்களை அழைப்பதற்காக அழைப்பு மணியை ஒலிக்கச் செய்வதற்காக வாகனத்தின் அருகில் இருந்த காவலர்கள் சென்றனர்.

வாகனத்தின் அருகில் இருந்த ஒரே ஒரு பெண் காவலர் மட்டும் அந்த கைதியை விடாமல் போராட, அவரை அந்த கும்பல் தாக்கி தரையில் தள்ளிவிட்டு அந்த கைதியை மீட்டுச் சென்றது. நடந்த துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers