பிரான்சில் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்: வெளியான காரணத்தால் அதிர்ச்சி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

நேற்று பிரான்சின் கோர்சிக்கா பகுதியில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானதோடு, ஐவர் காயமடைந்த சம்பவம் தீவிரவாதிகள் தாக்குதலாக இருக்குமோ என பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒரு சிறிய விடயத்திற்காக அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது தெரியவந்ததையடுத்து அதிர்ச்சி நிலவுகிறது.

சுமார் 60 வயதுள்ள Joseph Orsoni என்னும் நபர் நேற்று மாலை 4.25 மணியளவில் திடீரென போவோர் வருவோர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

அங்கு குவிந்த பொலிசார் மீதும் அந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பொலிசார் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.

சாலையில் போவோர் வருவோர் மீது கண்மூடித்தனமாக சுட்டதில் ஒருவர் உயிரிழக்க, அந்த நபர் பின்னர் தன் வீட்டுக்குள் சென்று மறைந்து கொண்டார்.

பின்னர் பொலிசார் அவரை தேடிச் செல்லும்போது, தனது வீட்டிற்குள் Joseph பிணமாக கிடப்பது தெரியவந்தது.

அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

பின்னர் மேற்கொண்ட விசாரணையில், Josephஇன் நாய் தனது பக்கத்து வீட்டுக்காரரின் காதலியை கடித்ததால், அவர் Josephஇடம் சண்டையிட, மரம் வெட்டும் மின்சார அரத்தால் அவரைத் தாக்கிய Joseph, பின்னர் வீட்டிற்குள் சென்று தனது துப்பாக்கியை எடுத்து தெருவில் போவோர் வருவோரையெல்லாம் சுட்டதும் தெரிய வந்துள்ளது.

சிறிய ஒரு விடயத்திற்காக Joseph இவ்வளவு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியதால் பொலிசாரும் பாதிக்கப்பட்டோரும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers