கனடா நாட்டு சுற்றுலாப்பயணி பாலியல் துஷ்பிரயோக வழக்கில் தீர்ப்பு: கதறி கண்ணீர் விட்ட குற்றவாளிகள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சுக்கு சுற்றுலா வந்த கனடா நாட்டுப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய பொலிசார் இருவருக்கு இன்று காலை தண்டனை விதிக்கப்பட்டுள்ல நிலையில், தீர்ப்பைக் கேட்ட இருவரும் கதறிக் கண்ணீர் விட்டார்கள்.

கனடா நாட்டைச் சேர்ந்த Emily Spanton (39) என்னும் பெண் பிரான்சுக்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், பொலிசார் இருவரை பார் ஒன்றில் சந்தித்தார்.

பிரான்சில் புகழ் பெற்ற இடங்களில் ஒன்றான தங்கள் பொலிஸ் நிலையத்தை காண வருமாறு அந்த பொலிசார் அழைக்க, இந்த நேரத்தில் தான் தங்கியிருந்த அறைக்கு செல்வதைவிட பொலிஸ் நிலையத்திற்கு செல்வது பாதுகாப்பானது என்று எண்ணிய Emily, அவர்களுடன் செல்ல சம்மதித்தார்.

புகழ்பெற்ற ஒரு இடம் என்பதால் பலர் அங்கிருப்பார்கள், வெளிச்சமாக இருக்கும் என நம்பி தான் அவர்களுடன் சென்றதாகவும், அந்த பொலிஸ் நிலையமோ இருட்டாக இருந்ததாகவும் கூறியுள்ளார் Emily.

அங்கு சென்றபோது, ஏற்கனவே மது அருந்தியிருந்த தன்னைக் கட்டாயப்படுத்தி மேலும் மது அருந்தச் செய்த பொலிசார் தன்னை வன்புணர்வு செய்ததாக தெரிவித்துள்ளார் Emily.

குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிசாரில் ஒருவரான Nicolas Redouane (49), வாழ்நாளெல்லாம் பெண்களுடன் நான் சரியான முறையில் பழகியிருக்கிறேன், ஒரு பொலிசாராக அந்த பெண்ணை நாங்கள் அன்று இரவு பொலிஸ் நிலயத்திற்கு அழைத்து வந்திருக்கக்கூடாதுதான், ஆனால் நான் அந்த பெண்ணைத் தாக்கவோ அவளுடன் பாலுறவு கொள்ளவோ இல்லை என கண்ணீருடன் கூறுகிறார்.

குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு பொலிசாரான Antoine Quirin (40), நான் என் மனைவியிடம் உண்மையில்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் நான் இதுவரை எந்த பெண்ணையும் வன்புணர்வு செய்ததில்லை, இந்த பெண்ணை நான் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கவே இல்லை என கதறியழுகிறார்.

ஆனால் Emilyயோ, மூன்று பொலிசார் தன்னை கட்டாயப்படுத்தி முழங்காலிடச் செய்து மிருகங்கள் போல் வன்புணர்வு செய்தபோது, எப்போது அவர்கள் தன்னை விடுவார்கள், அங்கிருந்து தப்பினால் போதும் என பல்லைக் கடித்துக் கொண்டு இருந்ததாக கூறுவதை கேட்கும்போது நிச்சயம் வருந்தாமல் இருக்க முடியாது.

பொலிசாரின் வாதங்களை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிசார், பொலிசார் போல் நடந்து கொள்ளாமல் பொலிஸ் துரத்தும் குற்றவாளிகளைப்போல் நடந்து கொண்டிருப்பதாக கண்டித்தார்.

குற்றவாளிகள் இரண்டுபேருக்கும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தாங்கள் Emilyயை வன்புணர்வு செய்யவில்லை என்று மறுத்தாலும், Emily தொடர்ந்து ஒரே மாதிரியாக உறுதியான வாக்குமூலம் கொடுத்ததாலும், அவரது உள்ளாடையில் கிடைத்த குற்றம் சாட்டப்பட்டவர்களின் DNA உட்பட, குற்றவாளிகளுக்கெதிராக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியான வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாலும் பொலிசார் இருவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers