Brexit தொடர்பில் பிரான்சையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் எச்சரிக்கும் தொழிலதிபர்கள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப்படாத நிலையில் பிரெக்சிட் நிறைவேற்றப்படுமானால், அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுமானால், அதனால் பிரான்ஸ் மட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியமும் கடுமையாக பாதிக்கப்படும் என பிரான்ஸ் நாட்டு தொழிலதிபர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப்படாத நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுமானால், இரு நாடுகளுக்கும் இடையில் எளிதில் கெட்டுப்போகக்கூடிய பொருட்களை பரிமாற்றம் செய்வதில் பெரும் குழப்பம் ஏற்படும் என பிரான்ஸ் தொழிலதிபர்கள் கூட்டமைப்பின் தலைவரான Geoffrey Roux de Bezieux தெரிவித்துள்ளார்.

பிரான்சும் பிரித்தானியாவும் 30 ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகம் செய்து வரும் நிலையில், மார்ச் 29ஆம் திகதி ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை என்றால் குழப்பம்தான் நேரும் என்று கூறும் Geoffrey, பிரித்தானியாவிலும், பிரான்சிலும், ஐரோப்பாவிலும் பல வாரங்களுக்கு இந்த குழப்பம் நீடிக்கும் என்கிறார்.

ஐரோப்பிய ஏற்றுமதியாளர்கள் பிரித்தானியாவில் தங்கள் வர்த்தகம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கி விட்டார்கள்.

ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும் உள்ள ஐரோப்பிய தொழிலதிபர்கள் பிரெக்சிட்டால் பல்வேறு நிலைகளில் பாதிப்பு ஏற்படும் என அஞ்சுகின்றனர்.

கலாயிஸ் துறைமுகப்பகுதியின் மேயரான Natacha Bouchart, பிரான்சிலும் பிரித்தானியாவிலும் 27 கிலோமீற்றர் தூரம் வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும், தினந்தோறும் 7,000 முதல் 10,000 லொறிகள் வரை பயணிக்கும் பாதையில் தடை ஏற்படாமல் இருக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பெரிய நிறுவனங்கள் அவசர கால நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கிவிட்டாலும், சிறு நிறுவனங்களைப் பொருத்தவரையில் ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப்படாத பிரெக்சிட் பெருங்குழப்பம்தான் என்கிறார் Geoffrey.

தற்போதைய சூழலில், பிரெக்சிட் தினத்தன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருக்கும் பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தங்களுக்கு கீழ் வராத பிரித்தானியாவை ஒரு மூன்றாவது நாடாக நடத்துவதற்குத்தான் கடமைப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers