பரிஸ் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை உடையில் தற்கொலை செய்து கொண்ட மருத்துவரால் பரபரப்பு

Report Print Kavitha in பிரான்ஸ்

பரிஸ் நகரில் பொபினி (Bobigny) பகுதியில் சத்திரசிகிச்சையின் போது அணியும் ஆடையை அணிந்து பிரபல மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் பொபினியில் உள்ள Avicenne மருத்துவமனையில், ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த மருத்துவர் (57 வயது) உடல் பருமன் சிகிச்சை,உடல் வளர்ச் சிதை ஆகிய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளும் நிபுணர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர் கடந்த சில மாதங்களாக தீவிர நோயுக்குள் சிக்கியிருந்ததாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனையின் அவசரசிகிச்சை மருத்துவரான Christophe Prudhomme “சத்திரசிகிச்சையின் போது அணியும் உடையினை மருத்துவர் அணிந்திருந்ததாகவும், அதன்பின்னரே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கின்றது” எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers