பிரான்சில் மனைவிக்கு நீச்சல் உடை ஆர்டர் செய்த கணவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்! பார்சலில் என்ன வந்தது தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் தன்னுடைய வீட்டு முகவரிக்கு தெரியாமல் வந்த சுமார் 18000 பவுண்ட் மதிப்புள்ள தங்ககட்டிகளை, அந்த நபர் காவல்நிலையத்தில் கொண்டு போய் கொடுத்த சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

பிரான்சின் Britanny மாகாணத்தின் Vannes பகுதியைச் சேர்ந்தவர் Julien. 27 வயதான இவருடைய வீட்டிற்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை இணையத்தில் ஆர்டர் செய்த பொருள் ஏதோ ஒன்று வந்துள்ளது.

அவர் தன் மனைவிக்கு ஆர்டர் செய்த நீச்சல் உடை தான் வந்திருப்பதாக நினைத்து, அதை திறந்து பார்த்துள்ளார்.

ஆனால் உள்ளே சுமார் 18,000 பவுண்ட் மதிப்புள்ள தங்க கட்டிகள் இருந்துள்ளது. அது ஒவ்வொன்றும் 20-லிருந்து 50 கிராம் வரை இருந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தன் மனைவியிடம் இதைப் பற்றி கேட்டுள்ளார். ஆனால் அவரோ அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளார்.

இதனால் Julien உடனடியாக டெலிவரி வந்த முகவரியை பார்த்த போது, அவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் நபருக்கு வந்ததை அறிந்துள்ளனர்.

இதை நாம் சென்று கொடுத்தால் வேறு மாதிரி பிரச்சனையாகிவிடும் என்று எண்ணி உடனடியாக காவல்நிலையத்தில் கொடுத்துள்ளனர்.

Julien-யின் இந்த செயலைக் கண்டு பொலிசார் பாராட்டிய நிலையில், France's National Gold Association அவருக்கு இன்ப அதிர்ச்சியாக ஒரு தங்ககட்டியை பரிசாக கொடுத்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers