சகோதரனின் பிணத்தை மெத்தையில் அடியில் மறைத்த பெண்: பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மை

Report Print Kavitha in பிரான்ஸ்

Euro மாவட்டத்தில் மனநலம் பெண் ஒருவர் தனது சகோதரனின் உடலை மெத்தை ஒன்றின் அடியில் மறைத்து வைத்திருந்து தொடர்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளதாக ஜோந்தாமினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், 80 வயதுகளையுடைய பெண் ஒருவரது வீட்டில் இருந்து அப்பெண்ணின் சகோதரின் (61 வயது) சடலம் ஜோந்தாமினர்களால் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த நபர் கடந்த 10 வருடங்களாக அவர் கீழங்கவாதம் நோயினால் பாதிப்புக்கு உள்ளாகி கட்டிலிலேயே உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சடலம் பொலித்தீன் பை ஒன்றினால் நன்றாக சுற்றி கட்டப்பட்டு, மெத்தைக்கு அடியில் மறைத்து வைத்து அந்த அறை மூடப்பட்டு, பாவனையற்று இருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் சகோதரி காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

மேலும் விசாரணையில் அந்த பெண்மனி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

தற்போது குறித்த நபரின் உயிரிழப்பு இயற்கை மரணம் எனவும், வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் இரண்டாம் கட்ட பிரேத பரிசோதனையில் தெரிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers