துண்டான மஞ்சளாடை போராளியின் கை: கலவரத்தில் முடிந்த போராட்டம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மஞ்சளாடைப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவரின் கை பிய்த்தெறியப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.

பாராளுமன்ற வளாகத்தின் அருகாமையில் நடந்த போராட்டத்தில் வன்முறைகள் வெடித்திருந்த நிலையில் குறித்த நபரின் கை பிய்த்தெறியப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த நபருக்கு வெறும் நான்கு விரல்கள் மட்டுமே துண்டானதாக தெரிவித்த பொலிசார்,

பாராளுமன்றத்திற்குள் நுழைய அவர் எத்தனித்தபோதே இந்தச் சம்பவம் நடந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இவரது கை துண்டிக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

காணொளியை காண

கலவரத்தை கட்டுப்படுத்த பொலிசார் வீசிய கைக்குண்டே இவரது கையைப் பிய்த்தெறிந்துள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த போராட்டங்களில் மருத்தவசிகிச்சை மற்றும் முதலுதவிகளை வழங்கும் street medic என அழைக்கப்படும் மருத்துவக் குழு இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தி உள்ளது.

தலைநகர் பாரிஸில் இது 13 வது வாரமாக தொடர்ந்து மஞ்சளாடை போராளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காயம்பட்ட நபரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது தற்போதைய நிலை தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.

பாராளுமன்ற வளாகத்தில் அத்துமீறிய 10 ஆர்ப்பாட்டக்காரர்களை இதுவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இதில் சிலர் பாராளுமன்ற வளாக முதன்மை வாசலில் சிறுநீர் கழித்ததாகவும் பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers