பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து! சடலமாக மீட்கப்பட்ட தாய்-குழந்தை

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் காரணமாக பெண் ஒருவரும், குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பிரான்சின் லியோனி எட்டாம் வட்டாரத்தில் Route de Vienne வீதியில் இருக்கும் இரண்டடுக்கு கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

குறித்த பகுதிக்கு சரியாக உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணிக்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை போராடி அணைத்தனர்.

அதன் பின் கட்டிடத்திற்குள் சென்று பார்த்த போது பெண் ஒருவரையும், அவரது குழந்தையையும் தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர்.

மேலும் இந்த தீ விபத்து காரணமாக நான்கு பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் உயிர் பிழைப்பதற்காக கட்டிடத்தின் வெளியே பாய்ந்ததாகவும், அவருக்கும் எந்த ஒரு பெரிய அளவிலான தீக்காயம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers