பிரான்சில் 12 வயது மஞ்சள் மேலங்கி போராளி கைது!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சேர்த்து 12 வயது சிறுவன் ஒருவனும் கைது செய்யப்பட்டான்.

நேற்றைய தினம் Montpellier நகரில் 13ஆம் வார மஞ்சள் மேலங்கி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அவர்களில் 12 வயது சிறுவன் ஒருவன், உடைந்த டைல்ஸ் துண்டுகளை பொலிசாரை நோக்கி வீசி எறிந்துள்ளான். இதனைத் தொடர்ந்து குறித்த சிறுவன் உட்பட தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள் பலரை பொலிசார் கைது செய்தனர்.

காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவனை, அவனது பெற்றோர் சில மணிநேரங்களில் வந்து அழைத்துச் சென்றனர். எனினும், குறித்த சிறுவன் விரைவில் உள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் இதுவரை நடந்த மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் குறைந்த வயது சிறுவன் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers