பிரான்ஸ் நாட்டிலுள்ள ஒரு விமான தளத்தில் சிறிய ரக விமானம் ஒன்று ஓடுதளத்தில் பனியில் வழுக்கிச் சென்று மோதும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
பிரான்சின் பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றில் தங்கியிருந்தவர்களின் கண்முன் நடந்த இந்த விபத்தை, அவர்களில் ஒருவர் படம்பிடித்துள்ளார்.
அந்த Piper PA-46 ரக விமானம், தரையிறங்கும்போது ஓடுபாதையிலும் பனி இருந்ததால் அதன் சக்கரங்கள் நிற்காமல் வழுக்கிக் கொண்டே செல்ல, இறுதியில் ஓடு பாதையையும் தாண்டி பனிச்சரிவில் மோதி நிற்கிறது விமானம்.
விமானத்தில் ஐந்து பயணிகள் மட்டுமே இருந்த நிலையில், நான்கு பேருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டன.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள்.
Courchevel Altiport என்னும் அந்த பனிச்சறுக்கு ரிசார்ட்டில் அமைந்துள்ள அந்த விமானதளம் உலகின் ஆபத்தான விமான தளங்களில் ஏழாவது ஆபத்தான விமான தளம் என பெயர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.