பிரான்சில் மஞ்சள் மேலாடை குத்துச் சண்டை வீரருக்கு சிறை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள் தங்கள் ஹீரோவாக நினைத்த குத்துச் சண்டை வீரர் ஒருவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பேரணி ஒன்றின்போது பொலிசாரை தாக்கிய அந்த குத்துச் சண்டை வீரர் சில மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்களால் ஹீரோவாகக் கருதப்பட்டார்.

முன்னாள் குத்துச் சண்டை வீரரான Christophe Dettinger (37), ஜனவரி 5ஆம் திகதி பொலிசாரைத் தாக்கும் வீடியோ வெளியானது.

அந்த தாக்குதலைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட Dettinger இன்னும் காவலில்தான் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு தண்டனை விவரங்கள் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு பொலிசாரை Dettinger தாக்கும் காட்சி நீதிமன்றத்தில் போட்டுக் காட்டப்பட்டது.

தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த Dettinger, ஒரு அநீதியை தடுத்து நிறுத்த விரும்பினேன், இன்று நானே குற்றவாளியாக நிற்கிறேன் என்றார்.

போராட்டக்காரர்களுக்கெதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதால் கோபமடைந்த தான், அந்த தவறை செய்து விட்டதாக கூறிய Dettinger, பொலிசார் லத்திகளால் போராட்டக்காரர்களைத் தாக்கிக் கொண்டிருந்தார்கள், ஒரு பெண் கீழே விழுந்து கிடந்தார், ஒருவர் அந்த பெண்ணை மிதித்தார், இன்னொருவர் அந்த பெண் மீது லத்தியை ஓங்கினார், நான் தடுத்து அந்த பொலிசாரை தாக்கினேன் என்றார்.

ஆறு மாதங்கள் பாரீஸுக்குள் நுழைய Dettingerக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அவரால் தாக்கப்பட்ட பொலிசார் இருவருக்கு அவர் முறையே 2,000 மற்றும் 3,000 யூரோக்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers