பிரான்சில் தண்டனைக்காக காத்திருக்கும் 1422 மஞ்சள் மேலாடை போராளிகள்: காரணம் இதுதான்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் மஞ்சள் மேலாடை போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 1422 பேர் தங்கள் மீதான தீர்ப்புக்காக காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி பிரான்சில் மஞ்சள் மேலாடை போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டவர்கள் தீவிர வலதுசாரிக் கட்சியினரோ அல்லது வர்த்தக நிலையங்களை உடைத்துக் கலவரம் செய்தவர்களோ அல்ல என்றும், சாதாரண மஞ்சள் மேலாடை போராளிகளே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 1796 பேர் மீது பொலிசார் வழக்கு தொடர்ந்தனர். அவர்களில் 1300 பேர் உடனடியாக விசாரிக்கப்பட்டு, 316 பேருக்கு உடனடியாக தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் சிறைக்கு அனுப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மற்ற மஞ்சள் மேலாடை போராளிகள் மீதான விசாரணைத் திகதிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் இன்னுமும் 1422 பேர் தங்களின் மீதான வழக்குடன், விசாரணைக்காகவும், தீர்ப்பிற்காகவும் காத்திருக்கின்றனர். இவர்களில் பலர் தங்கள் தரப்பு வாதத்தை முன்னிறுத்துவதற்கான கால அவகாசத்தையும் கோரி உள்ளனர்.

ஆனால், எவ்வளவு காலத்தில் இவர்களின் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறியாத பரிதாப நிலையில் இவர்கள் உள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers