பிரான்சில் உள்நாட்டு யுத்தம் நடக்கிறது! மேக்ரான் அரசு கவிழ்க்கப்படும்: பகிரங்க எச்சரிக்கை

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் உள்நாட்டு யுத்தம் நடப்பதாகவும், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை பதவியிலிருந்து இறக்குவதற்கு தன்னிடம் படை ஒன்று தயாராக இருப்பதாகவும் மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்களின் தலைவர் ஒருவர் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இத்தாலிக்கும் பிரான்சுக்கும் இடையில் உரசல்கள் நிலவி வரும் நிலையில், தனது இத்தாலிய கூட்டாளிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு, மஞ்சள் மேலாடை அமைப்பின் தலைவர்களில் ஒருவரான Cristophe Chalencon இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய Chalencon, எங்களிடம் மக்கள் இருக்கிறார்கள், ராணுவத்தினர் இருக்கிறார்கள், அவர்களும் அரசை கவிழ்ப்பதற்கு தயாராக இருக்கிறார்கள் என்றார்.

பார்ப்பதற்கு எல்லாம் அமைதியாக இருப்பதுபோல்தான் இருக்கிறது, ஆனால் நம் நாடு உள்நாட்டு யுத்தத்தின் விளிம்பில் இருக்கிறது என்றார் அவர்.

நான் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கிறேன் என்பது எனக்குத் தெரியும் என்று கூறும் Chalencon, எந்த நேரமும் நான் சுடப்படலாம் என்கிறார். ஆனால் நான் சுடப்பட்டால் மேக்ரானின் ஆட்சி கவிழ்க்கப்படும்.

நான் இறந்தால் மேக்ரானும் தோற்பார் என்னும் நிலைக்கு வந்திருக்கிறோம் என்று கூறும் Chalencon, மக்கள் மேக்ரானின் வீட்டுக்குள் நுழைந்து அவரையும், அவர் மனைவியையும், அவரது கூட்டத்தையும், அனைத்தையும் அழித்துவிடுவார்கள் என்கிறார்.

உங்களிடம் ராணுவம் இருக்கிறதா என அழுத்திக் கேட்கும்போது, ஆம் என்னிடம் ராணுவத்தினர் இருக்கிறார்கள், அரசுக்கு எதிரான, ராணுவத்திலிருந்து வெளியேறிய ராணுவத்தினர் இருக்கிறார்கள் என்கிறார் Chalencon.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்