பொலிஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்திய மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள்: அதிர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பொலிஸ் வாகனம் ஒன்றின்மீது மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரெஞ்சு நகரமான Lyonஇல் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அந்த வீடியோவில், நாங்கள் சிக்கிக் கொண்டோம், உதவி தேவை என அந்த வாகனத்தில் இருக்கும் பொலிசார் ஒருவர் உதவி கோரும் காட்சி பதிவாகியுள்ளது. நெடுஞ்சாலை ஒன்றை மறித்து போராட்டக்காரர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.

போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட அந்த பொலிஸ் வாகனத்தை சூழ்ந்து தாக்கும் போராட்டக்காரர்களில் சிலர் மஞ்சள் மேலாடை அணிந்துள்ளார்கள், சிலர்சாதாரண உடையில் உள்ளார்கள்.

அந்த வாகனத்தை இயக்கும் பெண் பொலிசார் அதிர்ச்சிக்குள்ளாகி, பயந்தவாறே வாகனத்தை அங்கிருந்து நகர்த்திச் செல்ல முயல்கிறார்.

அவருடன் இருக்கும் இன்னொரு பொலிசார் அந்த பெண் பொலிசை ஆறுதல் படுத்தும் வகையில், மெதுவாக, மெதுவாக செல்லுங்கள் என்கிறார்.

வாகனத்தை சூழ்ந்து கொண்ட போராட்டக்காரர்கள் தொடர்ந்து சுமார் ஒரு நிமிடத்திற்கு வாகனத்தைத் தாக்க, அதற்குள் உதவிக்கு மற்ற பொலிசார் வருகிறார்கள்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரான்சின் உள்துறை அமைச்சர் Christophe Castaner, இத்தகைய வன்முறை சம்பவங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers