அல் கொய்தா அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர் பலி! பிரான்ஸ் படைகள் கொன்றதாக தகவல்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
257Shares

பிரெஞ்சுப் படைகள் அல் கொய்தா அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரை கொன்றுவிட்டதாக பிரான்சின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அல் கொய்தாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான Yahya Abou El Hamame என்பவரை மாலியில் நடந்த ஒரு ஆபரேஷனில் பிரெஞ்சு ராணுவ வீரர்கள் கொன்றுவிட்டதாக பிரான்சின் பாதுகாப்புத்துறை அமைச்சர் Florence Parly நேற்று தெரிவித்தார்.

அல்ஜீரியாவைச் சேர்ந்தவரும் அல் கொய்தா தளபதிகளில் ஒருவருமான Yahya, வடக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஏராளமான மேற்கத்திய நாட்டவர்களை கடத்தியவராவார்.

பாரீஸில் பாதுகாப்புத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், Yahya பல தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டதோடு, நிதியுதவியும் செய்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மாலியின் Timbuktu நகருக்கு வடக்கே அணிவகுத்துச் சென்ற வாகனங்களில் ஒன்றில் Yahya பயணித்தபோது பிரெஞ்சுப் படைகள், வான் வழி மற்றும் தரை வழித் தாக்குதல் மேற்கொண்டபோது அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்