பிரான்ஸ் முழுவதும் 46 ஆயிரம் பேர் பங்குபெற்ற மஞ்சள் மேலாடை போராட்டம்! உள்துறை அமைச்சகம் தகவல்

Report Print Kabilan in பிரான்ஸ்

நேற்றைய தினம் பிரான்ஸ் முழுவதும் சுமார் 46,600 பேர் மஞ்சள் மேலாடை போராட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரான்சில் 15வது வாரமாக மஞ்சள் மேலாடை போராட்டம் நடந்து வருகிறது. நேற்றைய தினம் தலைநகர் பாரிசில் 5,800 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் நாடு முழுவதும் 46,600 பேர் மஞ்சள் மேலாடை போராட்டத்தில் கலந்துகொண்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த வாரத்தை விட அதிகமாகும். கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 41,500 பேர் கலந்துகொண்டனர்.

பாரிசில் நடந்த போராட்டத்தில் 28 பேரை பொலிசார் கைது செய்ததாக தெரிவித்துள்ளனர். எனினும், அந்நகரில் அமைதியான முறையில் போராட்டம் நடந்தது. நேற்றைய தினம் நடந்த போராட்டத்தின் முடிவில் மோதல்கள் வெடித்தபோது, பொலிசார் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தினர்.

Clermont-Ferrand நகரில் 2,500 பேர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பொலிசார் 18 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களுடன், பேஸ்பால் மட்டைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் Rennes நகரிலும் 18 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 6 பொலிசாரும், கலக கட்டுப்பாட்டுக் குழாயால் ஆறு ஆர்ப்பாட்டக்காரர்களும் காயமடைந்தனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers