பிரான்சில் சர்க்கஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து! 4000 பேர் உடனடி வெளியேற்றம்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் உள்ள சர்க்கஸ் அரங்கு ஒன்றில் திடீரென தீப்பற்றியதால், 4000 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

லியோன் நகரில் உள்ள Halle Tony Garnier அரங்கில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென அரங்கில் தீப்பற்றிக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் பொலிசார், அரங்கில் இருந்த 4,000 பேரை உடனடியாக வெளியேற்றினர்.

தானியங்கி தீ ஒலிப்பான் எழுந்ததால் பார்வையாளர்கள் தாங்களாகவே வெளியேறத் தொடங்கினர். இதன் காரணமாக உயிர்சேதம் தடுக்கப்பட்டது. மேலும் தீ பெரிய அளவில் பரவாமல் தடுக்கப்பட்டது.

மின் அழுத்தம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக பின்னர் தெரிய வந்தது. அதன் பின்னர் 5 மணி காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு பார்வையாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

எனினும், இச்சம்பவம் குறித்து ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை பதிவு செய்திருந்தனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers