ஆடல் பாடலுடன் போராட்டம், இனி இப்படித்தான்! : மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரீஸின் Champs-Elyséesஇலுள்ள ஒரு பிரபல காபி ஷாப்பினுள் நுழைந்த மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள், ஆடல் பாடலுடன் தங்கள் போராட்டத்தை மேற்கொண்டார்கள்.

அமெரிக்க காபி நிறுவனமான Starbucksஇன் காபி ஷாப் ஒன்றிற்குள் நுழைந்த அவர்கள், பிரான்சில் அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதற்கெதிராக தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஆடல் பாடலுடன் எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினார்கள்.

Starbucksஐ பிணைக்கைதியாக பிடித்துக் கொள்ளப்போகிறோம் என்று வேடிக்கையாக கூறினார் போராட்டக்காரர் ஒருவர்.

முதலில் மெக் டொனால்ட்ஸ்க்கு எதிராகத்தான் போரிட திட்டமிட்டதாகவும், ஆனால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததையடுத்து தங்கள் திட்டத்தை மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்தனர் போராட்டக்காரர்கள்.

ஆடல் பாடலுடன் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் மஞ்சள் மேலாடை எதிர்ப்பாளர்கள், அது நல்ல பலனளிப்பதாகவும், இனி இதுதான் தங்கள் புதிய போராட்ட முறை என்றும், இது பிரான்ஸ் முழுவதும் பரவும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers