சர்வதேச தீவிரவாதியாக அறிவியுங்கள்: கோரிக்கை எழுப்பிய பிரான்ஸ், இங்கிலாந்து

Report Print Fathima Fathima in பிரான்ஸ்

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என ஐ.நாவில் பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன.

புல்மாவாவில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக பால்கோட் பகுதியில் அதிரடியாக தாக்குதல் நடத்திய இந்தியா தீவிரவாத முகாம்களை அழித்தது.

இத்தாக்குதலில் சுமார் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படும் சூழலில், இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் சிறைப்பிடித்துள்ளது.

இதனை தொடர்ந்து எல்லையில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது, அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தானும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என ஐ.நாவில் பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஏற்கனவே இந்த கோரிக்கை எழுப்பப்பட்ட போது, மறைமுகமாக சீனா எதிர்த்ததாக குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், அடுத்த 10 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட வேண்டும்.

ஒருவேளை கோரிக்கை நிறைவேறினால் மசூத் அசார் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers