பிரான்சில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய தண்டனை! அதிரடி காட்டிய நீதிமன்றம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் இதுவரை மஞ்சள் ஆடை போராளிகளுக்கு இதுவரை இல்லாத பெரும் தண்டனை கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பிரான்ஸ் நீதிமன்றத்தில் மஞ்சள் ஆடை போராளி குறித்த தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. அதில் 43 வயதுடைய நபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஜோந்தார்மினரைப் பல முறை தாக்கிய வழக்குடன், மொத்தமாக 18 வழக்குகள் அவர் மீது போடப்பட்டிருந்தன.

மஞ்சள் ஆடைப் போராட்டங்களின் போது, பல வன்முறைகளில் ஈடுபட்டதுடன், பல வர்த்தக நிலையங்களின் உடைப்புகளிலும் அவர் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து நேற்று வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 3 வருடம், 3 மாதம், அதாவது மொத்தம் 39 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மஞ்சள் ஆடைப் போராட்டம் ஆரம்பித்த நாட்களில் இருந்து இதுவரை இப்படியான பெரும் தண்டனை வழங்கப்பட்டதில்லை என்பதால், இது மஞ்சள் ஆடை போராட்டக்காரர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers