பிரான்சில் மோசமாக நடந்து கொண்ட இளைஞன்! சாதுர்யமாக செயல்பட்டு பொலிசாரிடம் சிக்க வைத்த இளம் பெண்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் பெண் ஒருவரிடம் மிகவும் மோசமாக நடந்த கொண்ட இளைஞன் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

பிரான்சின் Yvelines நகரத்தில் இருக்கும் Saint-Germain-en-Laye இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த RER A என்ற இரயிலில் 26 வயது இளைஞன் பயணம் செய்துள்ளான்.

அப்போது அவன் அமர்ந்திருக்க இருக்கைக்கு எதிரே சுமார் 29 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இருந்துள்ளார்.

இதைக் கண்ட அவன், சில நிமிடங்களில் அந்த பெண்ணிடம் தகாத ஆபாசமாக செயல்களில் ஈடுபட்டுள்ளான்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், சாதூர்யமாக செயல்பட்டு அங்கிருந்த பொலிசாரை அழைத்துள்ளார்.

அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் குறித்த இளைஞனை கைது செய்து அழைத்துச் சென்றனர். இது குறித்து அந்த பெண் வழக்கு தொடர்ந்துள்ளதால், வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers