பிரான்சில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை தகவல்! இதை மீறினால் 35 யூரோ அபராதம் தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறினால் அபராதத் தொகை செலுத்த நேரிடம் என்று கூறப்படுகிறது.

பிரான்சில் வீதிகளில் உள்ள பாதசாரிகள் கடவைகளுக்கு இரு புறங்களிலும் புதிதாக buffer zones எனும் புதிய கோடுகள் உள்ளூர் நகரமண்டபத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாதசாதிகள் கடவையில் இருந்து இரு பக்கங்களிலும் ஐந்து மீற்றர் இடைவெளியில் இந்த கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கோட்டுக்கு வெளியே வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். பாதசாரிகள் கடவையில் நீங்கள் உங்கள் வாகனத்தை நிறுத்தவேண்டும் என்றால் இந்த கோட்டுக்குள் நுழையாமல் நிறுத்தவேண்டும். இல்லையென்றால் 35 யூரோ வரை அபராதம் செலுத்த நேரிடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்