பிரித்தானியாவில் வாழ்ந்த பிரெஞ்சு இளம்பெண் கொலை: முன்னாள் காதலன் கைது

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரித்தானியாவில் வாழ்ந்து வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரான ஒரு இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் அவரது முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Garcia-Bertaux (34) வேலைக்கு வராததையடுத்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார்.

பொலிசார் லண்டனிலுள்ள அவரது வீட்டின் பின் பக்கத்தில் உள்ள தோட்டத்திலேயே லேசாக மண்ணைத்தோண்டி அவரை போட்டு மூடியிருந்ததைக் கண்டுபிடித்தார்கள். உடற்கூறு பரிசோதனையில், அவர் கழுத்து நெறித்து கொல்லப்பட்டிருந்தது தெரியவந்தது.

குற்றவாளியை யூரோபோல் உதவியுடன் பொலிசார் தேடி வந்த நிலையில், எஸ்தோனியா நாட்டின் தலைநகரான Tallinnஇல், 32 வயதான Garcia-Bertauxஇன் முன்னாள் காதலரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தற்போது எஸ்தோனிய காவல் நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அவரை பிரித்தானியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை பொலிசார் தொடங்கியுள்ளனர்.

2009ஆம் ஆண்டு Saint Martins கல்லூரியில் கலை மற்றும் டிசைன் கற்ற Garcia-Bertaux, திரைப்படங்கள் தயாரிப்பில் இறங்கினார்.

ஒரு இயக்குநராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் ஆக வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்