பிரான்ஸ் விமான நிலையத்தில் சடலமாக கிடந்த இளம் பெண் யார்? அதிர்ச்சியடைந்த அதிகாரி

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் விமானநிலையத்தில் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த பெண் திடீரென்று தற்கொலை செய்து கொண்டதால், இது தொடபான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் Charles de Gaulle விமானநிலையத்தில் Sentinel force அதிகாரியாக 24 வயது இளம் பெண் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை சக அதிகாரி விமானநிலையத்தின் பகுதிகளை சுற்றி வந்த போது, இவரின் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன் பின் இந்த தகவல் விமானநிலையத்தில் இருக்கும் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், அங்கு வந்த அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்த பெண் விமானநிலையத்தின் பகுதிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருந்த போது தற்கொலை செய்து கொண்டதாகவும், இதற்கான காரணம் தெரியவில்லை எனவும், இந்த வழக்கு விசாரணையை Villepinte நகர காவல் துறையினர் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்