தீவிரவாதிகளின் குழந்தைகள் தொடர்பில் பிரான்ஸ் எடுத்துள்ள நடவடிக்கை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

வட கிழக்கு சிரியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் வசிக்கும் குழந்தைகள் பலரை பிரான்சுக்கு திரும்ப அழைத்து வந்துள்ளதாக பிரான்ஸ் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று இந்த தகவலை வெளியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சகம், அந்த குழந்தைகள் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள் என்றும், சிலர் பெற்றோரை இழந்தவர்கள் என்றும், சிலர் தங்கள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றில், மேற்கத்திய நாடுகள் ஆதரவு பெற்ற சிரிய குடியரசு படைகள் (SDF), இந்த நடவடிக்கையை எளிதில் முடிக்க உதவியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரிய குடியரசு படைகள் தங்கள் எல்லையிலிருந்து ஐ.எஸ் அமைப்பை முற்றிலும் தோற்கடிக்க தொடர்ந்து போராடி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போது மீட்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு மருத்துவ மற்றும் மனோநல சிகிச்சைகள் அளிக்கப்படும் என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளதோடு, அதே நேரத்தில், ஐ.எஸ் அமைப்பில் சேருவதற்காக சென்ற பிரான்ஸ் நாட்டவர்கள், எங்கு குற்றமிழைத்தார்களோ அங்கேயே தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்